மொழிகளின் நாளில் ஆதி அந்தம் காணா எம் தாய் தமிழுக்கு சில வரிகள்… மொழிகள் மலர் தோட்டத்தில் மொழிகளின் மகரந்தமே… செம்மொழிகளின் கூட்டத்தில் மங்காத சூரியனே… இலக்கியங்களின் புகழில் உயர்ந்து நிற்கும் இமயமே… காலத்தின் கையெழுத்தில் கலையாத ஓவியமே… உள்ளங்களை உரமாக்கும் வாழ்வியல் நீரோடையே… வரலாற்றின் வள்ளலே சொற்களின் அரசியே… நாளும் இளமையாய் நடைபோடும் கன்னியே… உன் சொற்கள் காற்றில் மிதக்க உயிர் சுவைக்கும் அமிழ்தமாகுதே… தாய் தமிழே உன்…
கதை – கவிதை
-
-
காலம் சிதைத்த கனவுகள் என, வரலாறு கனிந்து கூறிடும். விதியின் விளையாட்டில் வீழ்ந்தோர் என, வேதங்கள் மெல்லப் பாடிடும். ஆராய்ந்து பார்க்கையில், துரோகம், ஏமாற்றம் நிழலாய் ஆடிடும்! உழைப்பின் சுரண்டல்கள் கண்டு முறித்துவிடாதே உன் மனதை, உன் திறமை உன்னை வழிநடத்தும். ஏமாற்றத்தின் நிழல் கண்டு முடக்கிவிடாதே திறமையை, காலத்தின் கற்பிதம் மனதில் கொள்! தடைகள் சூழ நின்றாலும் கண்ணீரின் ஆழத்தை கடந்து செல், கனவுகள் மெய்ப்படும். துரோகத்தின் வலிகள் …
-
வெள்ளைக்கோயில் என்றால் அந்தப் பகுதியில் சுடுகாடு என்ற அர்த்தம். ஆனால் அது ஒரு கிராமமும் கூட. கிராம முனிஸீபு முதலிய சம்பிரமங்கள் எல்லாம் உண்டு. ஊர் என்னமோ அப்படி அப்படித்தான். ‘வெள்ளைக்கோயிலுக்குப் போகிறேன்’ என்றால் உலகத்திடம் செலவு பெற்றுக்கொள்வது என்பது அந்தப் பகுதி வாசிகளின் வியாக்கியானம். ஆனால், வெள்ளைக்கோயிலுக்குப் போய்த் திரும்பி வருகிறவர்களும் பலர் உண்டு. ஏன், சுப்பு நாடான் தினசரி காலையும் சாயங்காலமும் அங்கு போய்த்தான் ஏழை மக்களுக்குக்…
-
விழி அம்பு உன் விழி அம்பால் காயப்பட்ட என் இதயம் இன்று ஆய்வறையில் அணுக்கருவை விட..! அதீத சக்தி வேண்டுமாம் விஞ்ஞானிகளுக்கு!
-
துபாயிலோ, குவைத்திலோ வேலை வாங்கித் தருவதாக மாத்யூ செய்திருந்த பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்துதான் அகல்யா அவனைச் சந்திக்கச் சென்றாள். நொடித்துத் தளர்ந்து நோயில் விழுந்து விட்ட வயதான பெற்றோரையும், படித்துக் கொண்டிருக்கிற தம்பி தங்கைகளையும் காப்பாற்ற அவளுக்கு ஓர் உத்தியோகம் தேவைப்பட்டது. வெறும் உத்தியோகமாக மட்டுமில்லை. கை நிறையப் பணம் சம்பாதிக்கிற உத்தியோகமாகத்தான் தேடினாள் அவள். ஆனால் குறைவாகச் சம்பாதிக்க முடிந்த வேலைகூடக் கிடைக்கிற வழியாயில்லை. மாத்யூவை அவள் சந்தித்தது…
-
கொள்ளைக்காரி என்னில் எப்போதும் உன் நினைவுகள்தான் இரவில்கூட நிம்மதியாய் உறக்கமில்லை… கனவில்கூட உனது தொல்லை என் இதயத்தைத் தான் கொள்ளையடித்தாய் விட்டு விட்டேன் ஆனால் இன்றோ..? என் உறக்கத்தையும் கொள்ளை கொண்டுவிட்டாயே!
-
தமிழின் காவலன், அண்ணா நீ, மேடைதோறும் புரட்சியாய் உன் சொற்கள் மக்கள் இதயம் கீற… உயிர்ப்பித்தாய் திராவிட இயக்கம் தனை… கல்வியின் சொல்லாடல், உன் வார்த்தைகள்… அறிவின் நெய்தல் உன் மொழிகள்… உன் பேச்சில் எண்ணங்கள் உயர்வாக விழித்தன தமிழரின் மனங்கள்… மதராஸ் பெயர் மறைந்து தமிழ்நாடு உதித்தது உன் தீர்க்கமான முடிவால்…. உன் இருமொழிக் கொள்கை தமிழரின் விளக்காக தமிழும் ஆங்கிலமும் அறிவின் சுடராக… இந்தியின்றி கல்வியில் உயர்ந்தது…
-
வாழ்க்கை சொல்லாத கதைகள் பேசும் ஒரு வானம் கனவுகள் கை கோர்க்கும் ஓர் அற்புத பயணம், உன் காலடியில் பயணம் தொடங்கும், கால்தடங்கல் மேல் காயங்கள் பேசும்… எதிர்வரும் சவால்கள் வெற்றிக்கான அழைப்புகள் இழந்திடாதே உன் மனதிடத்தை நின்று போராடு உயர்ந்து நில்… மேகங்கள் அழுதாலும் மழை வந்திடும் கண்ணீர் முத்துக்கள் தாண்டி வானவில் தோன்றிடும்… மழையில் நனைந்து புயலில் வீசப்பட்டாலும் தளராதே உன் நம்பிக்கை வேர்கள் ஆழமாய் நிலைத்திருக்கட்டும் …
-
-
விஜயகாந்த் எப்படிப்பட்டவர் தெரியுமா என இப்போதும் உருட்டிக்கொண்டு இருக்கிறது சமூக ஊடகமும், காட்சி ஊடகமும். அதில் முக்கியமானது விஜயகாந்த் தினமும் சோறு போட்டார். யாருக்கு சோறு போட்டார்? என்கிற கேள்வியை இதுவரை யாரும் எழுப்பவில்லை. விஜயகாந்த்துக்கு முன்பே நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் என்கிற எம்.ஜி.ஆர் க்கும் இதே வரியை சொல்லி கொண்டாடினார்கள். தினமும் சோறு போட்டார். யாருக்கு போட்டார் எம்.ஜி.ஆர்? தன்னை பார்க்க தினமும் ராமாவரம் தோட்டத்திற்கு வந்த ரசிகர்களுக்கு…








