தூக்கம் நன்று வாழ்க்கைமுறை வேகமாக மாறி வருகிறது. உணவுப் பழக்க வழக்கங்களும் மாறிவிட்டது. இந்நிலையில், தூக்கமும் சவாலான விஷயமாக மாறிவிட்டது. புதிதாக குழந்தையைப் பிரசவிக்கும் பெண்களுக்கு தூக்கம் என்பது இயலாத காரியமாகி விட்டது. அதற்காக, தாய்மை அடைவதை தவிர்க்க முடியுமா? அல்லது, குழந்தை பிறந்த பின், சில மணி நேரங்களுக்கு ஒரு முறை பால் புகட்டுவதை தள்ளிப் போடமுடியுமா? பெண்கள், தினமும் இரவு நேரங்களில் குறைந்தது 7 மணி நேரம்…
-
-
ஒவ்வொருநாளும்… முந்தைய இரவின் புறங்கண்டுமுகிழ்த்த சிவப்புப் புது உதயம் இன்று –உறங்கியவை யாவும் விழிப்புற்றனஇழந்தவை யாவும் பெற்றுக்கொண்டனஓய்ந்தவை யாவும் இயங்கத் தொடங்கின. முந்தைய இரவின் முச்சந்திகளில்முழங்கப்பட்ட முரண்பாடுகள்முழுவதுமாய் முகமழிந்தன. விரிந்து வியாபித்தவெளிச்சப் பெருங்கடலில்சௌந்தர்யங்கள் யாவும் சங்கமித்திருந்தன. சுற்றிலும் சூழ்ந்தகாற்றின் வயிற்றில்சுகந்தச்சுமை சூல்கொண்டிருந்தது. பிரச்‘சினை’க் கழுதைகளின்பிதுரார்ஜித முதுகுகளில்வாழ்க்கைப்பொதிகள் தடங்கலின்றிப் பயணித்தன. நிச்சயமற்ற முடக்கங்களைநிரந்தர அடக்கமாயெண்ணிநொண்டி நெஞ்சினர் நொடித்துப் புதைந்தனர். நிழல் ஒற்றர்கள்நேரமொரு கண்டமும் பூரண ஆயுளுமாய் நீண்டுசூரியனை எதிர்த்திசையில் எகிறித்தள்ளப் போராடினர்.…
-
ஆரிய சதியை முறியடித்த அரசி சுமார் பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் பாலாவோரை என்ற ஒரு அழகான ஊரில் நிகழ்ந்த புனை கதை இது. அங்கு உலாவிய மனிதர்களின் வாழ்வோடு விளையாடிய ஆரியவாதிகளுக்கும் அந்த திராவிட ஊரின் அரசுக்கும் இடையே நடந்த அதிகாரப்போட்டியை இது கூறுகிறது. இந்த ஆதிக்க அதிகார போட்டியில் சிக்கிய அரச குடும்பத்து உறவுகளும் அந்த மண்ணை நேசிக்கும் மக்களும் எப்படி ஒரு குடும்பமாக வாழ்ந்து தங்கள்…
-
“நீங்கள் எப்படி சாமி, இங்கே வந்து சேர்ந்தீர்கள்?” என்று திகைப்போடு கேட்டான் அவன். “இப்படித்தான், உன்னைப் போல்தான்” என்று அக்கறை இல்லாதவன் போல் பதில் சொல்லி முகத்தை அப்பால் திருப்பிக் கொண்டேன். “என்னை மறந்து விட்டாற் போல் தெரிகிறது, நான் தெரியவில்லையா, சாமி?” என்று அவன் கேட்டதும் திரும்பிப் பார்த்தேன். எனக்கு அவன் யார் என்றே தெரியவில்லை. ஒருவேளை அவன் என்னை அறிந்திருக்கலாம் பட்டணத்தில் பார்த்திருக்கலாம் என்று எண்ணினேன். “நீ…
-
தாய்மை போற்றுதும்! “மனித இனத்தின் தொட்டில் இந்தியா. மனித மொழியின் பிறப்பிடம் இந்தியா. வரலாற்றின் தாய், வீரத்தின் பாட்டி, பாரம்பர்யத்தின் கொள்ளுப் பாட்டி இந்தியா.” -மார்க் ட்வைன் மேற்கத்திய் நாடுகளில் மனைவிதான் வீட்டை நிர்வகிக்கிறாள். இந்தியாவில் வீட்டைக் கட்டுப்படுத்துபவள் தாய். அங்கு பெண் என்பவள் மனைவி. இங்கோ, அவள் தாய். அவள், வீட்டின் கடவுளாக வழிபடப்படுகிறாள். மூன்று அதிசயங்களை அவள் நிகழ்த்துகிறாள். வலியையும் சந்தோஷத்தையும் அனுபவித்து அவள் குழந்தையை பெறுகிறாள்.…
-
நம்மைச் சுற்றிய பல்வேறு விஷயங்களை அறிந்திருப்போம். ஆனால் அவை குறித்த அறியாத விஷயங்களும் இருக்கும். அந்த விஷயங்கள் நமக்கு தெரிய வரும்போது வியப்பாய் இருக்கும். நமது பூமி குறித்த பல்வேறு அறியாத விஷயங்கள் இதில் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. அத்துடன் பொது அறிவியல், விண்வெளி அறிவியல், கோள்கள், பிரபஞ்சம் குறித்த ஏராளமான வியப்பூட்டும் உண்மைகளும் இதில் படங்களுடன் இடம்பெற்றுள்ளன. இந்தியாவைப் பற்றி நாம் அறியாத பல உண்மைகளையும் இந்தப் புத்தகத்தில் அறிந்து…
-
காபி எனப்படும் உற்சாகமூட்டும் பானம் இல்லாமல் இங்கு பலருக்கும் காலை நேரம் சுறுசுறுப்பாகவே இருக்காது. அத்தகைய காபி குறித்த பல்வேறு உடல்நலம் சார்ந்த கருத்துகள் நிலவி வந்த நிலையில் ஒருவர் ஒருநளைக்கு 25 கப் காபி குடித்தாலும் ஒன்றுமே ஆகாது என்கிற புதிய ஆய்வறிக்கை காபி பிரியர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. காபியில் அதிகளவு காஃபின் இருப்பதால் இதய நோய் உண்டாகும் என்ற கருத்து நிலவியது. திடீரென்ற மாரடைப்பும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.…
-
புடலங்காய் கூட்டு செய்ய தேவையான பொருட்கள் 1½ கப் புடலங்காய் ¼ கப் கடலை பருப்பு ¼ கப் துருவிய தேங்காய் 1 மேஜைக்கரண்டி அரிசி மாவு 2 மேஜைக்கரண்டி பாசி பருப்பு 2 சின்ன வெங்காயம் 2 பச்சை மிளகாய் 1 மேஜைக்கரண்டி சீரகம் ½ மேஜைக்கரண்டி சீரக தூள் ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள் ½ மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு ¼ மேஜைக்கரண்டி கடுகு 1 சிட்டிகை…
-
தினம் தினம் புதுப்புது தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றன. தவிர, அந்த தொழில்நுட்பங்கள் மனித வாழ்க்கைக்குப் பயனுள்ளதாகவும் இருக்கிறது. அப்படியான ஒரு தொழில்நுட்பத்தைப் பார்ப்போம். குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாமல், வானளவுக்குப் புகை எழுப்பும் சூளை இல்லாமல், சித் தாள்கள் யாருமே இல்லாமல் செங்கற்களை தயாரிக்க முடியுமா? ‘முடியும்’ என்று கட்டை விரலை உயர்த்திக் காண்பிக்கின்றனர் அமெரிக்காவைச் சேர்ந்த கொலராடோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்தச் செங்கற்களைப் பாக்டீரியாவைக் கொண்டு தயாரிக்கின்றனர். பாக்டீரியாவால்…
-
குடிநீர் பற்றாக்குறை உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக உருவாகி வரும் நிலையில் கடல்நீரை குடிநீராக்குவது ஒன்றுதான் மனிதர்களுக்கு இருக்கிற கடைசி வழி என்று கருதப்படுகிறது. இதுவரை கடல்நீரை குடிநீராக்கும் தொழில்நுட்பம் அனைத்தும் அதிக செலவு பிடிக்கக்கூடியதாக இருக்கிறது.இந்நிலையில் பிரிட்டனிலுள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எளிய வழி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். கார்பனிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கிராஃபீன் எனப்படும் மெல்லிய சல்லடையைப் பயன்படுத்தி கடல்நீரை சுத்தமான குடிநீராக மாற்ற முடியும் என்று நிரூபித்துள்ளனர். அறுகோண…











