திருநெல்வேலியில் வெளியூர்க்காரர்களுக்கு அவ்வளவாகத் தெரியாத, ஐம்பது ஆண்டுகளுக்கு முன் காலத்தால் உறைந்து போனது போல் காட்சியளிக்கும், ஒரு பழைய கடைத்தெரு ஒன்றிருக்கிறது. வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பி, மாவீரன் ஊமைத்துரை முதல், சமீபத்தில் மறைந்த அறிஞர் தொ.ப வரை பலப்பல மனிதர்களை, வரலாறுகளைக் கண்டதை, கடந்ததைக், காட்டிக் கொள்ளாத பகுதி அது. பாளையங்கோட்டை தெற்கு பஜார் என்பது அதன் பெயர். அதன் கிழக்கு முனையில், குளோரிந்தா ஆலயம் என்ற ஒரு…
கட்டுரைகள்
-
-
இணைய தளத்தில், தலித்துகள் தனியாக வினையாற்ற வேண்டும் என்ற சர்ச்சைகள் அடங்கிய நேரம், வீட்டில் தலித்துகள் குறித்த பேச்சு எழுந்தது. ‘எப்படி இருந்தாலும் புத்திய காட்டிடுவாங்க’ என்று தலித்துகளை குறித்து பேசிய நண்பர், தான் ஒரு ஒரு ஜாதி இந்து என வெளிப்படையாக காட்டிக் கொள்பவர். ‘எப்படி இருந்தாலும் புத்திய காட்டிடுவாங்க’ என்ற சொற்றொடரைஇதற்கு முன் பலமுறை கேட்டும், சிலமுறை நானும் பயன்படுத்தியுள்ளேன். அவை எல்லாம் பார்ப்பனர்களை குறித்து. …
-
இந்திரா காந்தி 1975 ஆம் ஆண்டு கொண்டுவந்த நெருக்கடி நிலைக் காலத்தில்தான் அகில இந்திய தலைவர்கள் பலரைப்பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது. சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்களை ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஒருங்கிணைத்தார். அதுவரை சிதறிக்கிடந்த எதிர்க்கட்சிகளை சிறையிலேயே ஒருங்கிணைத்து ஜனதாக் கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கினார். தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையிலான அரசு இருந்ததால் நெருக்கடி நிலையின் வெப்பம் இங்கே தடுக்கப்பட்டது. அன்றைய தமிழ் செய்தித் தாள்களில்தான் வடக்கே நடப்பவைகள் தணிக்கையின்றி…
-
தஞ்சை பெரியகோயிலும் சிவன் உருவமும் அண்மையில் தாய்லாந்து நாட்டில் நடுகல்லாக நிறுவப்பட்டிருக்கிறது. அது இரண்டாம் உலகப் போர்க் காலம். அப்போது, தாய்லாந்து நாட்டின் பெயர் சயாம். இன்றைய மியான்மர், அன்றைய பர்மா. இரண்டு நாடுகளுக்குமிடையே ரயில் பாதை அமைக்கத் திட்டமிட்டது ஜப்பான். ஹிட்லரின் ஜெர்மனி, முசோலினியின் இத்தாலி ஆகிய நாடுகளுடன் ஜப்பானும் கூட்டு சேர்ந்து இங்கிலாந்து-பிரான்ஸ்-அமெரிக்கா நாடுகளைத் தாக்கி வந்தன. போரின் தொடக்கக் கட்டத்தில் ஹிட்லர் கூட்டணியின் கை ஓங்கியிருந்த…
-
யுடியூப்பில் விரும்பிப் பார்க்கும் பாடல்களில் ஒன்று காதல் கோட்டையில் வரும் நலம் நலமறிய ஆவல். நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பார்த்த பொழுது, இன்லேண்ட் லெட்டரை தேவயானி கைகளில் ஏந்தி அதற்கு முத்தமிட்ட பொழுது நினைவுகள் பல ஆண்டுகளுக்கு முன்னர் சென்று விட்டது. ஈமெயில், அலைபேசி மட்டுமில்லை, தொலைபேசி கூட எல்லோர் வீட்டிலும் இல்லாத காலத்தில் inland லெட்டர் தான் அனைத்துமாக இருந்தது. எங்கள் வீட்டிற்கு வரும் inland…
-
உலக பத்திரிகை சுதந்திர நாள் என்றால், ஒரு பத்திரிகையாளனாக எனக்கு சந்தோஷம்தான் ஏற்பட வேண்டும். அப்படியெல்லாம் இல்லை. பத்திரிகை சுதந்திரம் குறித்து 1975 காலகட்டத்தில்தான் எனக்கு புரிபடத் தொடங்கியது. ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிகைகள் என்று அரசியல் சாசனம் கூறுகிறது. இப்போது பத்திரிகைகள் என்பதைத் தாண்டி காட்சி ஊடகங்களும் இணைந்துள்ளன. ஆனால், ஒரு பத்திரிகையாளனாக நான் வெட்கப்படுகிறேன். இன்றைய பத்திரிகைகளும், காட்சி ஊடகங்களும் செயல்படும் விதம் எரிச்சலை ஏற்படுத்துகிறது. நேர்மையாக…
-
சலீல் சௌத்ரி செத்த பாம்பு திரும்பி அடிக்க கூடாது அப்படின்னு விட்டதுதான் இளையராஜா கங்கை அமரன் விஷயம். அதனால்தான், திரும்பவும் ஆர்எஸ்எஸ் துணையோடு வாய்க்கொழுப்போடு பேசி இருக்கிறார் கங்கை அமரன். இவர்களை ஆளாக்கிவிட்ட விடுதலைப்போராட்ட வீரர் ஐ.மாயாண்டி பாரதியிடம் நான் பேசி இருக்கிறேன். அவர் சொன்ன அனைத்தையும் இங்கே சொல்ல முடியாது , இளையராஜா, சலீல் சவுத்ரியிடம் உதவியாளராக வேலை செய்த போதுதான் அவருக்கு இசை என்னவென்று கற்றுக் கொடுக்கப்பட்டது.…
-
பெரியாரை உயிராய் காத்த மணியம்மை ”பெரியார் செத்துக் கொண்டிருந்தார். தமிழர் அழுது கொண்டிருந்தார்கள். ஆனால் பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்து போக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரைப் போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு. ஒன்று அவரின் பெருந்தொண்டு; மக்கள்மீது அவர் வைத்திருந்த அருள் மற்றொன்று. ஆயினும், காற்றிறங்கிப் பொதிமாடு போல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒருபால் ஒட்டிய குறியினின்று முன்னறிவிப்பு இன்றிப் பெருகும்…
-
I Hate You. இதை தாண்டி சொல்ல வேறு எதுவும் இருக்கிறதா என்ன? என்னை பார்க்காதே, என்னிடம் பேசாதே, என்னிடம் எதையும் எதிர்பார்க்காதே என்பதை தாண்டி வேறு எதுவும் இல்லை. உலகில் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளை விடவும் மிகவும் வலிமை நிறைந்த ஒரு சொற்றொடர். அதனாலேயே இதை நான் பயன்படுத்தியதே இல்லை. பல வருடங்களுக்கு முன்னர், ஓரிருவரை , அவர்கள் இறந்து போனால் கூட நன்றாக இருக்கும் என்று…
-
உயர் திரு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு எனதும் எனது மனைவியின் வாழ்க்கைக்கும் விடியலாக அமையும் என இருந்த இந்த ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு வைத்துதான் எடுப்போம் எனச் சொன்னதால் அதற்கு தயாரானோம். தற்போது அதற்கு PhD அவசியம் எனச் சொன்னதால் எனது மனைவிக்கு அந்த வாய்ப்பு இல்லை ஏற்கனவே நானும் எனது மனைவியும் பத்தாண்டுகள் காத்திருக்கிறோம். இதில் ஏதோ விடிந்தது போலிருந்த இந்த அறிவிப்பிலும் இருள் சூழ்ந்து விட்டது…








